2026-ன் தொடக்கத்தில் பல முக்கியமான கிரகப் பெயர்ச்சிகள் நடைபெற போகின்றன. ஜோதிடரீதியாக இந்த கிரக மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை. 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சுக்கிரன் சனிபகவான் ஆளும் ராசியான மகர ராசியில் நுழைவார். ஜோதிடத்தில் சுக்கிர ன் மிகவும் முக்கியமான கிரகமாவார். எனவே சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட யோகத்தை தரப்போகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது. இந்த பதிவில் 2026-ல் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் அதிர்ஷ்டமடையப் போகும் 3 ராசிகள் யார் யார் என நாம் இங்கு பார்ப்போம்.
மேஷம் மேஷ ராசிக்கு, சுக்கிரன் மகர ராசிக்கு பெயர்ச்சி அடைவது சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது. இந்த பெயர்ச்சி அவர்களின் அவர்களின் 10வது வீட்டில் நடைபெறப் போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்களின் செயல்திறன் மற்றும் நம்பிக்கை இரண்டும் பன்மடங்கு அதிகரிக்கப் போகிறது. வேலையில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் சிறப்பாக செயல்பட பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவார்கள், மேலும் மூத்த அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள்.
மகரம் மகர ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியால் சிறப்பான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த பெயர்ச்சி அவர்களின் 1வது வீட்டில் நடைபெறப்போகிறது, இது அவர்களுக்கு அமைதியையும், செழிப்பையும் தரப்போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்கள் தங்களுக்கான புதிய வேலையைக் கண்டுபிடிக்க முடியும், அதேபோல் அவர்களின் தற்போதைய வேலையை மாற்றவும் முடியும். வேலை செய்யுமிடத்தில் மேலதிகாரிகளின் உதவியையும், ஆதரவையும் பெறலாம். மேலும் அவர்களின் துறையில், பல சாதனைகளை செய்ய முடியும்.
துலாம் சுக்கிர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள். இந்த கிரக மாற்றம் அவர்களின் 4வது வீட்டில் நடைபெறப்போகிறது. இந்த சுக்கிர பெயர்ச்சியால் அவர்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகளை திறமையாக சமாளிக்க முடியும். தொழில் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும், குடும்ப வாழ்க்கையில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவும். இந்த யோகத்தால் அவர்களின் வாழ்க்கையில் ஆடம்பரம் அதிகரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் ஒரு புதிய சொத்து வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
