யாழில் பவுசருடன் மோதிய மோட்டார் சைக்கிள். சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்த குடும்பப் பெண் யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம் (20. 12. 2025) இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியில் கழிவுப் பொருட்களை ஏற்ற வந்த தனியாருக்கு சொந்தமான பவுசர் ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

