அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் வங்கிக் கடன்களுக்கு மேலதிக அறவீடு இன்றி 3 முதல் 6 மாத நிவாரண காலம் வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.
வங்கிகளுடன் கலந்தாலோசித்து இந்நிவாரணத்தைப் பெறலாம் என கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
முழு நாடும் வெள்ளம், சூறாவளி, மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் இன நல்லிணக்கம் உறுதியானது.
முப்படை, போலீஸ், அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர்.
சிறு, நடுத்தர கைத்தொழில்கள் 29,000 பாதிக்கப்பட்டன.
திறைசேரி 1 பில்லியன் ரூபா அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக 9628 தொழில்களுக்கு 150 மில்லியன் ரூபா பிரதேச செயலகங்களுக்கு வழங்கப்பட்டது.
வங்கிக் கடன்களுக்கு எவ்வித மேலதிக அறவீடுகளும் இல்லாமல் 03 முதல் 06 மாதம் என்ற அடிப்படையில் நிவாரண காலம் வழங்க, மத்திய வங்கி தலையீட்டுடன் வங்கி பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கடன் பெற்ற தொழிலாளர்கள் வங்கிகளுடன் கலந்தாலோசி நிவாரணம் பெறலாம்.
பாதிக்கப்பட்டுள்ள தொழில் துறைகளை மீட்டெடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்காமல் முடிந்தால் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
.jpg)