உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
திடீரென காட்டுக்குள் இருந்து ரத்தங்கள் சிதற கதறிய படி ஓடி வந்த பெண்-வெளியான திடுக்கிட வைக்கும் காரணம்..!
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அடுத்த விசலூர் பகுதியில் அதிர்ச்சி தரும் கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.
ஆள் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்தில் இருந்து கழுத்து, கைகளில் ஆழமான வெட்டுக்காயங்களுடன் ஒரு பெண் அலறியபடி சாலைக்கு ஓடி வந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.
அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து நாச்சியார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, தாக்குதலுக்கு ஆளானவர் துர்க்காதேவி என்பதும், தாக்குதல் நடத்தியவர் அவரது கணவர் மாதவன் என்பதும் தெரியவந்தது.
இந்த தாக்குதலுக்கு பின்னால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
16 ஆண்டுகால காதல் திருமணம்... துரோகம்... கொலை... பிரிவு!
நாச்சியார் கோவில் மாத்தூர் பூக்கார தெருவைச் சேர்ந்த மாதவனுக்கும் துர்க்காதேவிக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்பு காதல் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன. ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துர்க்காதேவி, ஜெயசீலன் என்பவருடன் நெருக்கமாக பழகியதால் கணவன்-மனைவி இடையே கடும் தகராறு ஏற்பட்டது.
2020-ல் தனது எச்சரிக்கையை மீறி பழகியதால் ஆத்திரமடைந்த மாதவன், ஜெயசீலனை உளியால் குத்தி கொலை செய்தார். இதில் மாதவன் கைதாகி சிறை சென்றார்.
காதலன் இறந்துவிட, கணவன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களிலேயே துர்க்காதேவி தனது இரு குழந்தைகளை தாயாரிடம் விட்டுவிட்டு மூன்றாவதாக ஒரு இளைஞருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.
சிறையில் இருந்து விடுதலையான மாதவன், தனது இரு பெண் குழந்தைகளை விட்டுவிட்டு இன்னொரு ஆணுடன் துர்கா தேவி உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பதை தெரிந்து மிகுந்த மனவேதனையுடன் குழந்தைகளை வளர்த்து வந்தார்.
மனைவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இரு ஆண்டுகளுக்கு முன்பு விஜி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், முதல் மனைவிதுர்கா தேவிக்கு பிறந்த இரண்டு பெண்குழந்தைகளை துர்க்காதேவியின் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டார்.
பழைய கோபம்... திட்டமிட்ட பழிவாங்கல்!
ஆனால், தன்னுடைய பெண் குழந்தைகள் நினைவால் துடித்து வந்துள்ளார் மாதவன். நாளுக்கு நாள் தன் குழந்தைகள் மீதான பாசமும், அவர்களின் அனாதை போல வாழ்வதை நினைத்து ஏக்கமும் கொண்ட மாதவனுக்கு கோவம் கொலை வெறியாக மாறியது.
இந்நிலையில், தன்னை கொலைகாரனாக்கியதோடு, குழந்தைகளை நிர்கதியாக்கிய முதல் மனைவி துர்க்காதேவி, மூன்றாவதாக காதல் திருமணம் செய்த இளைஞருடன் திருவாரூரில் வாடகை வீட்டில் உல்லாசமாக குடும்பம் நடத்தி வருவது மாதவனுக்கு தெரியவந்தது.
இதனால் கொதித்த மாதவன், துர்க்காதேவிக்கு "தக்க பாடம்" கற்பிக்க திட்டமிட்டார். திருவாரூரில் அவரை சந்தித்து சமாதானம் பேசுவது போல் நடித்து, "நாச்சியார் கோவிலுக்கு வா, குழந்தைங்க அம்மா எங்க.. அம்மா எங்கன்னு.. கேட்டுகிட்டே இருக்கு.. சும்மா ஒரு எட்டு வந்து பார்த்துவிட்டு போ.. குழந்தைகளுக்காக வா.." என்று கெஞ்சி அழைத்தார்.
நம்பிய துர்க்காதேவி, மாதவனுடன் இருசக்கர வாகனத்தில் ஏறி வந்துகொண்டிருந்தபோது, விசலூர் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத மறைவிடத்தில் வாகனத்தை நிறுத்திய மாதவன், தன்னுடைய ஆசாரி வேலைக்கு பயன்படுத்தும் உளியால் துர்க்காதேவியின் தொண்டைக்குழியில் சதக் என குத்த முயன்றார்.
ஆனால், தடுத்துக்கொண்ட துர்க்காதேவிக்கு இடது கழுத்து, இடது கை, இடது முதுகு, இடது தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ஆழமான வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. அலறியபடி சாலைக்கு ஓடி வந்த துர்க்காதேவியின் கூக்குரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட மாதவன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
போலீசார் விரைவாக வந்து மாதவனை கைது செய்தனர். கொலை முயற்சிக்கு பயன்படுத்திய உளியையும் பறிமுதல் செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல், துரோகம், கொலை, மறுதிருமணம் என திரைப்பட கதை போல் நடந்த இந்த சம்பவம், குடும்ப உறவுகளின் சிக்கலை மீண்டும் நினைவுபடுத்துகிறது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டு மொத்த சம்பவத்தில், எந்த பாவமும் அறியாத அந்த இரண்டு பிஞ்சு பெண் குழந்தைகள், ஏன் தாயின் அரவணைப்பும், தகப்பனின் ஆதரவும் இல்லாமல் வளரும் கொடூர நிலைக்கு தள்ளப்பட வேண்டும். பாட்டியின் காலத்திற்கு பிறகு, அவர்களின் நிலை என்ன..? அவர்கள் செய்த பாவம் தான் என்ன..? என்ற குமுறல் மட்டுமே மிஞ்சுகிறது.
Summary in English : In Thanjavur's Nachiyar Koil, Madhavan attempted to murder his estranged first wife Durga Devi by slashing her throat with a chisel in a secluded spot near Visalur. The attack stemmed from years of betrayal: she had an affair, leading him to kill her lover in 2020, after which she left with a third man. Madhavan remarried but later lured her back for revenge. She survived with injuries; he was arrested.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.