போதைப் பொருள் உள்ளிட்ட சட்டவிரோத விவகாரங்களுடன் தொடர்புள்ள அரச அதிகாரிகள் தற்போது முதல் அதிலிருந்து விடுபட வேண்டும். அல்லது அரச துறையில் இருந்து பதவி விலக வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ''முழு நாடும் ஒன்றாக'' தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, அமைச்சர் சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
