உலக சந்தையில் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இன்று (17) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4594.83 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,639 அமெரிக்க டொலர்களாக பதிவாகிய நிலையில், இன்று 4594.83 ஆக பதிவாகியுள்ளது.வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைப்பற்றியதன் மூலம், உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றம் பதிவாகி வருகின்றது. அதன்படி, உலகின் முக்கிய சந்தைகளில் தங்கத்தின் விலை 4,600 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலையும் 84 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
