இந்தோனேசியாவில் 11 பேருடன் பயணித்த ATR 42-500 ரக விமானம் ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெகாஸர் நகருக்கு அருகாமையிலுள்ள பகுதியில் இந்த விமானம் காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காணாமல் போயுள்ளதாகக் கூறப்படும் குறித்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சுக்கு சொந்தமானது என மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
