அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில்-சற்று முன் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு

 

வைத்தியர்கள் உட்பட ஒட்டுமொத்த அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக, அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதியைச் செலவிட நேரிட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அத்துடன், 2027 ஆம் ஆண்டில் இதற்காக 330 பில்லியன் ரூபா செலவாகும் எனவும் அமைச்சர் வெளிப்படுத்தினார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்: 

"நாங்கள் வைத்தியர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்கும் இந்த மாதத்திலும் அடிப்படைச் சம்பள அதிகரிப்பை மேற்கொண்டுள்ளோம்." 

"இந்த அடிப்படைச் சம்பள அதிகரிப்பிற்காக மாத்திரம் இவ்வருடத்தில் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது." 

"2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபா செலவானது. இவ்வருடம் 220 பில்லியன் ரூபா செலவாகின்றது. 2027 இல் 330 பில்லியன் ரூபா செலவாகும். இது மொத்த சம்பளத்திற்குச் செலவாகும் தொகை அல்ல. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு மாத்திரமேயாகும். அப்போது இது சம்பளத்துடன் இணைகின்றது." 

"அந்த அதிகரிக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் ஜனவரி மாதத்திலும் அதிகமாகக் கிடைத்தது. அந்த அடிப்படைச் சம்பளத்திற்கு அமைவாக மேலதிக நேரம் (OT) அதிகரிக்கின்றது. ஏனைய மேலதிக நேரக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. விடுமுறை தினக் கொடுப்பனவுகள் அதிகரிக்கின்றன. இவற்றை நாட்டின் பொருளாதார நிலைமைக்குச் சார்பாகவே செய்ய முடியும்," என்று தெரிவித்தார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post