மாத்தறை கட்டுபெலே சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்து, மற்றொரு மாணவன் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடனும், கார் ஒன்றுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹக்மனை, பெலியத்த வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய ஏஷான் பிரபோத என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் 16 வயதுடைய தனுக்க தேஜான் என்பவராகும்.
இருவரும் மாத்தறை மெதடிஸ்த மத்திய மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்.
