தம்புள்ளை - ஹபரணை வீதியின் திகம்பதன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதுடைய மற்றுமொரு இளைஞர் உயிரிழந்தார். ஹபரணை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும், எதிரே வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர், பின்னால் அமர்ந்து வந்தவர் மற்றும் வேனின் சாரதி ஆகியோர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்தார். சம்பவம் குறித்து சீகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
