இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று (31) திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று (30) ஒரு பவுண் 24 கரட் தங்கம் 393,000 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 396,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 364,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக இலங்கையின் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நான்கு இலட்சம் ரூபாவை நோக்கி அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் (31.03.2026) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
அதன்படி, உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,561.4 டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதேவேளை நேற்றைய தினம் உலக சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கம் 4,511.85 டொலர்களாக பதிவாகியிருந்தது.
அத்துடன் கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் (31.03.2026) 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 396000 ரூபாவாக காணப்படுகிறது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 364300 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சர்வதேச சந்தையில் வெள்ளி ஒரு அவுண்ஸின் விலை 71.98 டொலர்களாக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
