நள்ளிரவில் தமிழர் பகுதியை உலுக்கிய பயங்கரம் ; சகோதரிக்கு சகோதரனால் நிகழ்த்தப்பட்ட பெரும் கொடூரம்

 

வவுனியா - சொக்கடிப்புளவு கிராமத்தில் சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான சகோதரி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

செக்கடிப்புளவில் வசித்து வந்த 56 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண் மீது அவரது சகோதர முறையானவர் மதுபோதையில் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் அங்கிருந்தவர்களின் உதவியுடன் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குற்றம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை வெளிவரவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 






قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post