வாகன விபத்து: மட்டக்களப்பு இளைஞர் உயிரிழப்பு

 


பண்டாரவளை - வடக்கு கெபில்லவெல பகுதியில் சிற்றூந்து ஒன்றுடன் உந்துருளியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் உந்துருளியை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பண்டாரவளையிலிருந்து 3 ஆவது கட்டை வீதி ஊடாக பதுளை நோக்கி பயணித்த உந்துருளியும் எதிர்த்திசையில் வந்த சிற்றூந்தும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் உந்துருளியை செலுத்திய நபரும், அதன் பின்னால் பயணித்தவரும் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், உந்துருளியை செலுத்திவந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், சிற்றூந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பண்டாரவளை காவல்துறையினர் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post