எரிபொருள் விலை அதிகரிப்பு : பேருந்து கட்டணம் குறித்து வெளியான அறிவிப்பு

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருந்தாலும், அந்த மாற்றத்தை தற்போதைக்கு பேருந்து கட்டண திருத்தத்தில் பயன்படுத்த முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், திருத்தப்பட்ட விலையை உடனடியாக கட்டணங்களில் பிரதிபலிக்கச் செய்ய முடியாது என்றாலும், தற்போதைய நிலையில் பேருந்து உரிமையாளர்கள் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக, எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் நட்டத்தை பேருந்து உரிமையாளர்களே சுமக்க வேண்டியுள்ளது.

குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 500 ரூபாய் நட்டமடைகின்றன. தூர இடங்களுக்கான சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் ஒரு நாளைக்கு சுமார் 1,500 ரூபாய் வரை நட்டத்தை எதிர்நோக்குகின்றன.

ஜூலை முதலாம் திகதி வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், ஏனைய செலவுகளும் அதில் சேர்க்கப்படும்.

தற்போது டீசல் விலை 10 ரூபாயினால் அதிகரித்துள்ள போதிலும், இந்த தருணத்தில் கட்டண திருத்தத்தை கோருவதற்கு பேருந்து உரிமையாளர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை. எனினும், எரிபொருள் விலை அதிகரிப்பு பேருந்து தொழில்துறையின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.எரிபொருளின் தரம் குறித்தும் பாரிய சிக்கல் நிலவுகின்றது. எரிபொருளின் தரம் குறைந்துள்ளதால், எரிபொருள் தகனம் அதிகரித்துள்ளதாக பேருந்து உரிமையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர். இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் எரிபொருள் தரத்தை பரிசோதிக்கும் அதிகாரம் கொண்ட இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முடிவுகளில் திருப்தி இல்லாததால், எதிர்காலத்தில் சிங்கப்பூரின் உதவியுடன் தரத்தை பரிசோதிக்க வேண்டும்“ என தெரிவித்தார்.

இலங்கையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகியன தமது எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.

அந்த வகையில்  ரக பெட்ரோல் 12 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 410 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் ஓட்டோ டீசலின் விலை10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 392.00 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post