மே மாதத்தில் விண்வெளியில் "புளூ மூன்" (Blue Moon) எனப்படும் அரிய நிகழ்வு தோன்றவுள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றினால், இரண்டாவது பௌர்ணமியை "புளூ மூன்" என்று அழைப்பார்கள்.
ஏற்கனவே மே மாதம் 1ஆம் திகதி ஒரு பௌர்ணமி தோன்றிய நிலையில், வரும் மே மாதம் 31ஆம் திகதி மற்றுமொரு பௌர்ணமி தோன்றவுள்ளது. இந்த அதிசய நிகழ்வை வெறும் கண்ணாலேயே பார்த்து ரசிக்க முடியும்.
இதுதவிர, மற்றொரு அரிய நிகழ்வாக "விண்கற்கள் மழை" (Meteor Shower) இந்த மாதம் வானில் தோன்ற உள்ளது.
ஒரே மாதத்தில் இத்தகைய இரண்டு வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெறுவது வானியல் ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
