தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கல்விமடை பகுதியில் கருப்பன்ன சாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்தை காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் கோயிலில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அன்னதானத்தை தொடர்ந்து 100இற்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை அரசு ராஜாஜி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழாவில் விநியோகம் செய்யப்பட்ட குடிநீர் ஒவ்வாமையால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.