முதலில் அனைத்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சகல பாடங்களிலும் சித்தியெய்திய மாணவர்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்.
"அப்போ சித்தியெய்த தவறியவர்களுக்கு ஆறுதலாக ஏதும் கூறவில்லையே?"என்று கேட்டீங்க என்றால் "ஏன் ஆறுதல்?" என்பது தான் என் பதில்.
உதாரணத்திற்கு ஒரு சிறு விடயம்.
இதே நமது நாட்டில் தான் லக்ஷ்மண் லியோன்சன் என்ற பதினாறு வயது நிரம்பியவன் "Brittle bone disease " எனும் கொடுமையான எலும்பு சம்பந்தமான நோயில் சிக்குண்ட நிலையிலும் எடுத்துள்ளான் 9A தரச் சித்திகள்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும்,
சிறிய தாக்கத்திலும் எலும்பு முறிவு ஏற்படுவது
எலும்புகள் சுருங்கிப் போதல்
குறுகிய உயரம்
பற்கள் பலவீனமடைவது (Dentinogenesis imperfecta)
காதில் ஒலி குறைபாடு
உடல் வளர்ச்சி பாதிப்பு
நோயின் அளவுப்படி வாழ்நாள் மாறுபடும்.
லேசான வகை இருப்பின், சாதாரண வாழ்க்கை நடத்த முடியும்.
கடுமையான வகைகளில் குழந்தைப் பருவத்தில் கூட உயிரிழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோய்க்கு நிரந்தரமான குணமாக்கும் சிகிச்சை இல்லை.
இவ்வளவும் அந்த பிள்ளைக்கும் தெரியும்.
பிறகேன் படிப்பானே? என்று அவன் ஒருமுறையாவது யோசித்தது போல இருக்கா?இந்த ரிசல்ட்ஸ் ஐ பார்க்க!
இதையெல்லாம் பார்க்கும் பிள்ளைகளே நீங்களே சிந்தியுங்கள்!
அம்மா,அப்பா,குருவிற்கான கைம்மாறு தான் இந்த பெறுபேறுகள்.
டிக்டொக்கும் வட்ஸ்அப் ஸ்டேட்டஸ் உம் சோறு போடாது.
free fire விளையாடினா free யா வாழ்க்கை தூக்கி விடாது.
இதையெல்லாம் உணர்ந்து இனியும் காலம் கடக்கவில்லை.
இனியாவது படியுங்கள்.
கல்வி மட்டும் தான் உங்கள் வாழ்க்கைத் தரத்தை மாற்றும்.
✍️மோ. கோகுலன்.