பிரபல ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோ எனப்படும் 'டீச்சர் அம்மா' என்பவரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் இளைஞன் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஆசிரியர் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி அந்த இளைஞன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதன்படி, ஜனவரி 28 ஆம் திகதி மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதி நிர்ணயித்துள்ளது.
கந்தானை பொலிஸ் பரிசோதகர் மற்றும் ஒரு குழுவினர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டனர்.
நீதிபதிகள் அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
ஆசிரியருக்குச் சொந்தமான தனியார் கல்வி நிறுவனத்தில் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றியதாக மனுதாரர் கூறியுள்ளார்.
இதன்போது, பெண் ஒருவருக்கு கணினிப் பயிற்சி அளிக்குமாறு தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு இளம் பெண்ணை தன்னிடம் ஒப்படைத்ததாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
இவ்வாறு அவர் கணினி பயிற்சி அளித்துக்கொண்டிருந்தபோது, மே 6 ஆம் திகதி அந்த இடத்திற்கு வந்த ஹயேஷிகா பெர்னாண்டோ, பேஸ்புக்கில் பதிவிட்ட கருத்து குறித்து விசாரித்த தன்னை உதைத்ததாக தெரிவித்தார்.
பின்னர் மற்றொரு குழுவால் அவர் கொடூரமாக தாக்கப்பட்டதாக மனுதாரர் குற்றம் சாட்டினார்.
பின்னர் குறித்த யுவதியின் பெற்றோர் அழைக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்ததாக தன் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாக அவர் கூறினார்.
மே 14 ஆம் திகதி, தாக்குதலின் காரணமாக வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நிறுவனத்தின் உரிமையாளரின் முறைப்பாட்டின் பேரில், கந்தானை பொலிஸ் அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாகவும், 48 மணி நேரம் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுதாரர் மேலும் குற்றம் சாட்டினார்.
நியாயமான காரணமின்றி கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் பொருத்தமானதாகக் கருதும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தருமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.