லிவர்பூல் நட்சத்திரம் டியோகோ ஜோட்டா, அவரது சகோதரர் அண்ட்ரேவுடன் சேர்ந்து, வடக்கு ஸ்பெயின் வழியாக இங்கிலாந்துக்கு இரவு நேர படகுப் பயணத்தை மேற்கொள்ளச் சென்றுகொண்டிருந்தபோது, அவர் பயணித்த அதிசொகுசு சுப்பர்கார் லம்போர்கினி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தமை இன்று உலகம் முழுவதும் பெரும் சோக செய்தியாக மாறியுள்ளது.
அவர் பயணம் செய்த லம்போர்கினி சூப்பர் கார் £150,000 (யூரோக்கள்) இலங்கை பண மதிப்பில் 53,074,500 ரூபாய்கள் மதிப்புடையது என்று கூறப்படுகிறது.
போர்த்துக்கல் எல்லையிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள ஜமோரா அருகே உள்ள செர்னாடில்லாவில் A-52 இல் பயணித்துக்கொண்டிருந்தபோது காரின் டயர் வெடித்து கார் கட்டுப்பாட்டை இழந்ததில் கார் முழுமையாக தீப்பிடித்து எரிந்தது என கூறப்படுகிறது.