யாழ் J/170-j/171 மூளாய்-பொன்னாலை இரு வேறு பகுதியில் கிராம அலுவலகராக பணிபுரியும் குறித்த விதானை அனர்த்த காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியதற்கு அமைய பிரதேச மக்களாலும் மலரும் மூளாய் அபிவிருத்தி அமையத்தாலும் நேற்று கௌரவிக்க பட்டுள்ளார். அனர்த்த நேரங்களில் பல கிராம அலுவலகர்களின் செயல் திறன் குற்றம் சாட்டப்பட்டாலும் இவரைப்போல் சில விதானைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். அனர்த்த நேரங்களிலுல் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று பார்வையிட்டதும் அல்லாமால் பாதிக்ப்பட்டவர்களுக்கு நேரடியாகவே சென்று உதவியும் புரிந்துள்ளார். எந்தே நேரமும் அவர் அலைபேசி மக்கள் நன்மைக்காக ஒலித்தபடியே உள்ளது என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வறுமைக்கோட்டிற்க்கு உட்பட்ட மாணவர்கள்-பாடசாலை செல்லாத மாணவர்கள் என அனைவருக்கும் பகுதி நேரமாக பிரேத்தியமாக வகுப்புக்களை தானே எடுத்து கல்வி நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறார். தன் கிராமத்திற்காக இன்னும் உழைக்கும் உன்னத கிராம அலுவர்கள் இன்னும் ஈழமணித்திருநாட்டில் இருக்கிறார்கள் என்பது தமக்கு பெருமையே என பிரதேச மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. அவரின் சேவைக்கு தமிழ் பிளஸ் ஊடகம் வாழ்த்துகளை தெரிவித்து நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வாழ்த்துகிறது.

