சிறுபோக நெற்செய்கை மற்றும் ஏனைய பயிர்ச்செய்கைகளுக்காக மேலதிகமாக 25,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிய கப்பல் அடுத்த மாதம் தொடக்கத்தில் இலங்கையை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை தேசிய உர செயலகம் வெளியிட்டுள்ளது.சிறுபோக நெற்பயிர்ச்செய்கை உள்ளிட்ட இதர பயிர்களுக்கு மொத்தம் 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படுவதாக அதன் பணிப்பாளர் சந்தன லொகுஹேவால்கே தெரிவித்துள்ளார்.இதன்படி, அடுத்த மாதம் நடுப்பகுதியாகும் போது நாட்டின் கையிருப்பிலுள்ள மொத்த யூரியா உரத்தின் அளவு சுமார் 151,000 மெட்ரிக் தொன் வரை உயரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
