ஈரானில்விமான நிலையங்களை தாக்கி F-14 போர் விமானம் மற்றும் ஏவுகணை களஞ்சியங்களை அழித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை(IDF) தெரிவித்துள்ளது.
இன்றையதினம்(23)ஈரானின் மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதியிலுள்ள குறைந்தது ஆறு விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு விமானப்படை தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
இதில் ஒரு எரிபொருள் நிரப்பும் விமானம், F-14, F-5 மற்றும் AH-1 விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல்இராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் மத்திய ஈரானில் உள்ள தரையிலிருந்து–தரைக்கு ஏவப்படக்கூடிய ஏவுகணை களஞ்சியங்களும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலும் ஈரானும் இடையே ஏற்பட்ட மோதல் 11ஆவது நாளாக தொடர்ந்து வருவதாகவும், இந்த பகுதி தாக்குதலுக்கான பகுதி எனவும் கூறப்பட்டுள்ளது.
மேற்கு ஈரானில் உள்ள கெர்மான்ஷா பகுதியை குறிவைத்து, 15இற்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இஸ்ரேலுக்கு எதிராக இலக்குகள் கொண்ட ஏவுகணை களஞ்சியங்கள் அழிக்கப்பட்டுள்ளன எனவும் கூறப்பட்டுள்ளது.
"ஈரானின் இராணுவத் திறன்களை சீர்குலைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், ஈரான் வான்வெளியில் ஆட்சி நிலைநாட்டும் நோக்கில் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன," என IDF டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
IDF தனது X கணக்கில் வெளியிட்ட தகவலின் படி, இந்த தாக்குதல்கள் மூலம் தரையிறக்க பாதைகள், அடிநிலை பாதுகாப்பு கூடங்கள், எரிபொருள் நிரப்பும் விமானம், மற்றும் F-14, F-5, AH-1 விமானங்கள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
We use cookies to understand preferences and optimize your experience using our site, this includes advertising affiliated with Google.