யாழில் இனி அதிக ஒலி எழுப்பும் ஆலயங்களுக்கு ஆப்பு--ஆலயமொன்றின் ஒலிபெருக்கிகளை கைப்பற்றிய பொலிசார்..!

 

அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனின் நடவடிக்கையால் அதிகளவு ஒலி அமைப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி 30 இற்கும் மேற்பட்ட ஒலிப்பெருக்கிகள் மூலம் ஒலி அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் இது குறித்து முறையிட்டனர்.

தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அரசாங்க அதிபர் இது குறித்து உடன் நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சட்டத்திற்கு விரோதமான முறையில் அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் எடுத்துள்ள நிலையில் ஏற்கனவே அதிகளவு ஒலி எழுப்படும் பொழுது சட்ட நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தில் எடுக்கப்படும் என மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post