கிளிநொச்சியில் பயங்கரம்-தாய்-மற்றும் சகோதரன் மீது வாள் வெட்டு-வெளியான காரணம்..!

Sentamil Admin

 


தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தர்மபுரம் பகுதியில் நேற்று பிற்பகல் மனநலம் பாதிக்கப்பட்டவரின் வெட்டுக்கு இலக்காகிய நிலையில் தாயும் சகோதரனும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாள் வெட்டுக்கு இலக்கான தாயும் சகோதரனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக தாயார் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் நீதிமன்ற அனுமதியுடன் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.