வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 இலங்கையில்  கடந்த சில வருடங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டை வந்தடைந்துள்ளது.

அந்தவகையில், பயன்படுத்தப்பட்ட 1560 வாகனங்கள் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்துக்கு எடுத்துவரப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இறக்குமதித் தடை நீக்கப்பட்ட பின்னர் துறைமுகத்துக்கு வந்த முதல் வாகனக் கப்பலாகும்.

ஜப்பானின் (Japan) டொயோட்டா லேண்ட் க்ரூஸர், பிராடோ, BMW, மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசெல், டைஹாட்சு மற்றும் சுசுகி வேகன் ஆர் போன்ற பிரபலமான வாகனங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன.

நாட்டை வந்தடைந்த வாகனங்கள்: வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல் | Vehicle Import Permit Sri Lanka Vehicle Price

இதேவேளை, மற்றுமொரு வாகனக் கப்பல் மே மாத ஆரம்பத்தில் துறைமுகத்துக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் 3500 வாகனங்கள் எடுத்து வரப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.