காதலனுடன் சேர்ந்து பெற்ற மகனுக்கு தாய் செய்த கொடூரம்-சடலத்தை பயணப்பையில் அடைத்து வீசிய துயரம்..!

 

அசாம் மாநிலம் கவுகாத்தியில், தாய் ஒருவர் பெற்ற மகனை தனது காதலுடன் சேர்ந்து கொன்று பயணப்பொதிக்குள் அடைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 10 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தனது குழந்தை பிரத்தியேக வகுப்பு முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் பொலிஸில் புகார் அளித்தார். சிறுவனின் உடல் பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள வீதியில் பயணப்பொதிக்குள் கண்டெடுக்கப்பட்டது.

 

தாயின் வாக்குமூலங்களில் சந்தேகம் அடைந்த பொலிஸார், விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

விசாரணையில் அவர் தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது.

 

மேலும் அப்பெண் தனது காதலுடன் சேர்நது மகனை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

 

சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டது. குற்றவாளிகள் இருவரையும் பொலிஸார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.