சற்று முன் முல்லைத்தீவில் கோர விபத்து-மாணவி பலி..!


முல்லைத்தீவு - கர்நாட்டுக்கேணி பகுதியில்  பட்டா ரக வாகனம் மோதியதில் பாடசாலைக்கு சென்ற  சிறுமி  உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையதினம்  காலை  இடம்பெற்றுள்ளது.

எட்டு வயதுடைய  மாதீஸ்வரன் நர்மதா என்ற தரம் மூன்றில்  கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்விகற்கும்  பாடசாலை மாணவியே  சம்பவத்தில்  உயிரிழந்துள்ளார்

முல்லைத்தீவு - கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று  பாடசாலைக்கு  செல்லும் வழியில் குறித்த விபத்து  இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ்  வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளனர். 

குறித்த  விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிவேகம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது

அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும்  வேளைகளில்   குறித்த கர்நாட்டுக்கேணி  பகுதியில்    பொலிஸ் யாரும்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கர்நாட்டுக்கேணி  மக்கள்  விசனம் தெரித்துள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதி, கடந்த  இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில்  விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும், இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post