இலங்கை மின்சாரசபையின் தலைவர் அதிரடி முடிவு..!

 

இலங்கை மின்சார சபையின் தலைவர் பதவியை திலக் சியம்பலாபிட்டிய இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை எரிசக்தி அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர் கடந்த வருடம் செப்டம்பர் 26 ஆம் திகதி குறித்த பதவியை பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.