தமயனை மண்வெட்டியால் துடிதுடிக்க சாய்த்த தம்பி..!

 நுவரெலியா - லிந்துலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் கடந்த சனிக்கிழமை (10) இடம்பெற்றுள்ளது.

உடன் பிறந்த தம்பியால் கொடூரமாக கொல்லப்பட்ட அண்ணன் ; விசாரணையில் வெளியான பகீர் தகவல் | Brother Killed By Sibling Shocking Details Out

கொலைசெய்யப்பட்டவர் லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கொலை செய்யப்பட்ட அண்ணனும் சந்தேக நபரான தம்பியும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு எல்லை மீறியதால் கோபமடைந்த தம்பி தனது அண்ணனை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரான தம்பியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.