திடீரென மாறிய காலநிலை-மாமரத்துக்கு அருகில் ஓடியவர்கள் சம்பவ இடத்திலே உடல் கருகி பலி..?

 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பாடசாலையை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று (18) புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவர்கள் அருகில் உள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத், யஷ்வந்த் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரவிகிரண் படுகாயம் அடைந்து சுய நினைவை இழந்தார். அருகில் இருந்தவர்கள் ரவிக்கிரனை மீட்டு அரசு மருத்துவமணையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

இதேபோல் காமிரெட்டி மாவட்டத்தை சேர்ந்தவர் சுரேஷ் (25). இவரது நண்பர் மகேஷ். இருவரும் நேற்று ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post