Type Here to Get Search Results !

இலங்கையை சுற்றி பார்க்க வந்த நோர்வே.வெள்ளையர் சடலமாக மீட்பு..!

 

ஹிக்கடுவ கடலுக்கு நீராடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (18) பிற்பகல் நீரில் மூழ்கி காணாமல் போனதாக ஹிக்கடுவ பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திருந்தது. 

அதற்கமைய, உயிர் காக்கும் பிரிவினரின் உதவியுடன் குறித்த நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு வேவல கடற்கரைப் பகுதியில் குறித்த நபரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவத்தில் உயிரிழந்த நபர் 43 வயதுடைய நோர்வே நாட்டைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது. 

சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபர் அவரது சகோதரருடன் ஹிக்கடுவ கடலில் நீராடிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad