ஆனி மாதம் இந்த ராசியினருக்கு பெரும் யோகமாம்..!

 ஜூன் மாதத்தில் செவ்வாய், சூரியன், சுக்கிரன் பெயர்ச்சி, புதன் இருமுறை பெயர்ச்சி என 5 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும், குஜகேது சேர்க்கை, சூரிய புதன் சேர்க்கை என சிறப்பான கிரக சேர்க்கைகளும் நடக்க உள்ளன. 

இதன் காரணமாக 12 ராசிகள் மீதும் அதன் தாக்கம் ஏற்படக்கூடும். அதில் எந்தெந்த ராசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும், நிதி நன்மைகள் ஏற்படும். வேலை தொழிலில் வெற்றி கிடைக்கும் என இங்கு தெரிந்து கொள்வோம். 

ஜூன் மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகள்... 

ஜூன் மாதாத்தில் ஜூன் 6ல் புதன் பகவான் மிதுன ராசியிலும், பின் 29 ஆம் திகதி கடக ராசியில் என இருமுறை மாற உள்ளார். கிரகங்களின் அதிபதியான சூரிய பகவான் 15 ஆம் திகதி பகை ஸ்தானத்திலிருந்து சம ஸ்தானத்திற்கு மாற உள்ளார். இந்த மாதத்தில் மிக முக்கிய கிரக மாற்றமாக சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிக்க உள்ளார். 

இந்த கிரக பெயர்ச்சிகளால், சூரியன் புதன் சேர்க்கை, செவ்வாய் கேது சேர்க்கை என நன்மை தரும் மாற்றங்கள் நடக்க உள்ளன. 

ரிஷப ராசி - ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு ஜூன் மாதத்தை பொறுத்த வரை உங்கள் வேலைகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பதற்கான புத்துணர்ச்சியும், திறமையும் நிறைந்திருக்கும். அதனால் வெற்றியை அடைய முடியும். திருமண முயற்சியில் உள்ளவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு. இந்த மாதத்தில் உங்கள் கடின உழைப்பிற்கான வெகுமதி கிடைக்கும். நீங்கள் முன்னர் செய்த முதலீடு, கடின உழைப்பிற்கான பலனை, நற்பெயரை பெற வாய்ப்பு உண்டு. இந்த மாதத்தில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழிகள் தொடங்கலாம். சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். சுப வேலைக்கான விஷயங்களில் செலவு செய்வீர்கள். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

மிதுன ராசி - மிதுன ராசியில் ஏற்கனவே சஞ்சாரம் செய்து வரக்கூடிய சூரிய பகவான் பல விதத்தில் சாதகமான பலன்கள் தரும் நிலையில், ஜூன் 15ல் உங்கள் ராசிக்கு மாறுகிறார். இதனால் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டத்தின் எழுச்சி பிறக்கும். குருவின் அருளும், சூரியனின் அருள் கரணமாக திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், திருமணத்திற்கு பெண் தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதனால் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்காக சிந்திக்கவும், வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளவும் முடியும். நிதி நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வேலையை மாற்றுவது தொடர்பாக முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வகையில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ரிஷப ராசியில் புதாதித்ய யோகம் உருவாகக்கூடிய நிகழ்வு நல்ல மாற்றத்தைத் தரும். 

சிம்ம ராசி - சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதத்தில் தன்னம்பிக்கை மற்றும் தலைமைத்துவ திறன் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். குரு உங்களுக்கு லாப ஸ்தானத்தில் இருப்பதாலும், செவ்வாய் உங்கள் ராசியிலும் வருவதால் உங்களின் சாதூர்யம் அதிகரிக்கும். பணம் சேர்ப்பதற்கான முயற்சியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பும், வேலையில் எதிர்பார்த்த ஏற்றமும் கிடைக்கும். இந்த மாதத்தில் திருமண முயற்சியில் ஈடுபட்டால் நல்ல வரன் அமைய வாய்ப்பு உண்டு. யாரிடமும் வாக்குவாதங்களையும், பணம் கடன் வாங்குதலையும் தவிர்க்கவும். தான, தர்மங்களில் ஈடுபடுவது நல்லது. தொழில் தொடர்பான பயணங்கள் நல்ல அனுகூல பலனைத் தரும். சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 

மகர ராசி - மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில், வரக்கூடிய ஜூன் மாதம் வெற்றியும், பாராட்டும் நிறைய கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உங்களின் சிறப்பான சிந்தனை, செயபாட்டிற்கான வெகுமதியைப் பெறுவீர்கள். நிதி நிலை முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இந்த மாதத்தில் புதிய முதலீடுகள், புதிய திட்டங்களின் மூலம் வேலை செய்தல் போன்ற விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி, சம்பள உயர்வு, பரிசு போன்ற நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் தொழில் சார்ந்த விஷயத்தில் பண ஓட்டம் சிறப்பாகவும், லாபம் எதிர்பார்த்த வகையிலும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பு சார்ந்த விஷயங்களில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post