யாழில் கோர விபத்து-இரு இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்..!

 

யாழ்ப்பாணம் - செம்மணி சந்தியில் மோட்டார் சைக்கிளும் பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர். 

இந்நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து விசாரணைகளை யாழ்ப்பாணம் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.