உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
உலகை உறைய வைத்த விமான விபத்து-17 வயது சிறுமியின் கடைசி வார்த்தைகள்-நண்பி வெளியிட்ட உருக்கமான தகவல்..!
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு நாள் முன்பு, விபத்தில் உயிரிழந்த தனது உயிர் நண்பியான 17 வயது பிராச்சி கஜ்ஜார் தன்னிடம் கதைத்த கடைசி வார்த்தைகளை கூறி மனம் வருந்தியுள்ளார் 18 வயது திஷா தக்கர் எனும் சிறுமி.
'இதுதான் நான் உனக்குக் கொடுக்கும் கடைசி பரிசு' என நகைச்சுவையாகக் கூறிய பிராச்சி, திஷாவிடம் பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .
அந்த வார்த்தைகள் ஒரு கொடூரமான முன்னறிவிப்பாக மாறியுள்ளது என திஷா தெரிவித்துள்ளார்.
விமானம் மருத்துவ விடுதிக் கட்டிடத்தில் விழுந்தபோது விடுதியில் உள்ள தனது அத்தைக்கு உணவு கொடுக்க சென்ற பிராச்சியும் அவரது தந்தை ஜெயேஷும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
திஷாவும் பிராச்சியும் 9 ஆம் வகுப்பு முதல் உயிர்த் தோழிகளாக இருந்துள்ளனர், அடுத்த பருவத்தில் ஒரே கல்லூரியில் சேரவும் திட்டமிட்டிருந்துள்ளனர்.
கடந்த ஜூன் 11 ஆம் திகதி, இருவரும் பிராச்சியின் வீட்டில் மதிய நேரத்தை கழித்தனர், அப்போது வானிலை நன்றாக இருந்ததால் திடீரென்று திஷாவை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார் பிராச்சி.
அங்கு சென்றதும், உணர்ச்சிவசப்பட்டு , ஆச்சரியப்பட்ட திஷாவை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்., 'எதுவாக இருந்தாலும், நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன். யாராலும் எங்களைப் பிரிக்க முடியாது'," என்று திஷாவிடம் கூறியுள்ளார்.
பின்னர், பிராச்சி ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த திஷாவின் பிறந்தநாளுக்கு ஒரு பரிசை அன்றைய தினம் வழங்கியுள்ளார். “இதுதான் கடைசியாக, நான் உனக்கு தரும் பரிசு” என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளார்.
சம்பவதினத்தன்று, பிராச்சி திஷாவை அழைத்து, விடுதியில் உணவு கொடுக்க தனது தந்தையுடன் செல்லவுள்ளேன். தன்னுடனும் வருவீர்களா என கேட்டுள்ளார். திஷாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால், அவர் மறுத்துவிட்டார்.
மதியம் 12 மணிக்கு, பிராச்சி தனது தந்தையின் தொலைபேசியிலிருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தியை திஷாவுக்கு அனுப்பியுள்ளார். அதில் “மதியம் எனக்கு அழைப்பு விடுங்கள், நான் உங்களிடம் பேச வேண்டும்."என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அன்று மாலைதான் திஷா அந்தச் செய்தியைப் பார்த்துள்ளார் , "சரி" என திஷாவும் பதிலளித்துள்ளார்.
அன்று நள்ளிரவில், தன் நண்பியிடம் பேச வேண்டும் என்ற திடீர் உந்துதல் திஷாவுக்கு ஏற்பட்டது. அவள் அழைத்ததும், பிராச்சியின் அத்தை தொலைபேசியில் அழைத்து, பிராச்சி, அவளுடைய தந்தை மற்றும் அத்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதை கேட்ட திஷா அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.
விபத்துக்குப் பின்னார் , திஷா ஒரு வாரம் பிராச்சியின் வீட்டில்தங்கியுள்ளார்., "பிராச்சி என்னைச் சுற்றி இருப்பதை நான் இன்னும் உணர்கிறேன், என திஷா தெரிவித்துள்ளார்.
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.