இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய 8 வயது சிறுவனின் உயிரிழப்பு-பெற்றோர்களே மிகவும் அவதானம்

 

ஹீட்டரில் தண்ணீர் சுடவைக்கும் போது மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு - அனுராதபுரத்தில் சம்பவம்

மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மின்சாரம் தாக்கிய குறித்த சிறுன் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

வீட்டில் நீர் சூடாக்கியை (Heater) பயன்படுத்தும் போது சிறுவனுக்கு மின்சாரம் தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும், சிறுவனின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.