கடனுக்காக நண்பனிடம் மனைவியை விற்ற கணவர்- நண்பர்-பலமுறை கதற கதற பலாத்காரம்-தப்பி பொலிஸ் நிலையம் ஒடிய பெண்..!

 இந்தியாவில் சூதாட்டத்தில் ஏற்பட்ட கடனுக்காக கணவன் , நண்பனுக்கு மனைவியை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடனுக்காக நண்பனுக்கு மனைவியை விற்ற கணவன்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் | Mp Woman Husband Sells Wife To Friend For Debt

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வசித்து வந்த ஒருவர் சூதாட்டத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சூதாட்டத்தில் ரூ.50,000 வரை அவருக்கு கடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கடனை அடைப்பதற்காக அவர் தனது நண்பர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடன் வழங்கியவர்கள், பணத்தை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், கடனுக்காக ஒருவருக்கு தனது மனைவியை விற்பனை செய்துள்ளார்.

அந்த பெண்ணை கணவரின் நண்பர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தப்பி வந்த பெண், இந்தூர் மகளிர் காவல்நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு அளித்துள்ளார்.

பெண்னின் முறைப்பாட்டின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, அப்பெண்ணின் கணவர் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த கணவரின் நண்பரையும் போலீசார் தேடி வருகின்றதாக கூறப்படுகின்றது.