தமிழர் பகுதியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம்-நீதி கோரும் பெற்றோர்..!

 மட்டக்களப்பு காத்தான்குடியில் 15 வயது மாணவி ஒருவர், சக மாணவனுடன் உரையாடியதை தவறாக சித்தரித்த, அடிப்படைவாத சிந்தனை உடைய நபர்கள் தொடர்பிலான செயற்பாடு தற்போது பேசுபொருளாகியுள்ளது.

இவர்களை இஸ்லாமிய சட்டப்படி பள்ளிவாசலில் திருமணம் செய்ய முயற்சித்ததாக குற்றச்சாட்டு பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

எனினும் குறித்த முறைபாடு தொடர்பில் உரிய தரப்புக்கள் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழர் பகுதி ஒன்றில் மாணவிக்கு நடந்த கொடூரம் ; நீதி கோரும் பொலிஸார் | Befell The Student In Kattankudy Truth Revealed

எதிர்தரப்பின் பணபலம் காரணமாக தமக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இச்சம்பவம் சமூகத்தில் பாலின பாகுபாடு மற்றும் சட்ட நடைமுறையாக்க குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு மனு ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.