ஈரானுடன் போர் நிறுத்தத்திற்கு கெஞ்சிய அமெரிக்கா…. ஒரே இரவில் நடந்த மாற்றம்

  

இஸ்ரேல் உடனான போரின் போது உடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு அமெரிக்க ஜனாதிபதி தங்களிடம் கெஞ்சியதாக ஈரான் தரப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் 12வது நாளை அடைந்திருந்த நிலையில், இன்று இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் வெளியிட்டிருந்தன.

இதன்படி, இன்று முதல் போர் நிறுத்தம் நடைமுறைக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான்-இஸ்ரேல் போர் தீவிரமடைந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் அபாயம் உருவாகுவதை உணர்ந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் போர் நிறுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தாக கூறப்படுகின்றது.

இருநாடுகளுக்கும் இடையிலான போரில் கடந்த ஞாயிற்றுக்கிமை அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதலை மேற்கொண்டது. ஈரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது.

இதானால் ஆத்திரமடைந்த ஈரான், கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து நேற்று இரவு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே, அமெரிக்கா உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கட்டார் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே ஈரான் அமெரிக்காவிற்கு தாக்குதல் நடத்துவது குறித்து அறிவித்திருந்தாக ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானின் இந்த தாக்குதலை சற்றும் எதிர்பாராத அமெரிக்க ஜனாதிபதி போர் நிறுத்த நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இஸ்ரேல் பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்ட டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததாகவும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த குழுவென்றை நியமித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுப்பப்பட்ட குழு, போரை நிறுத்த கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது. போர் நிறுத்தத்தை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று அமெரிக்க தரப்பு கிட்டத்தட்ட கெஞ்சியதாக கூறப்படுகிறது.

ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சவாலாக இருந்ததாகவும், இதனால் பல மத்திய கிழக்கு நாடுகள் ஈரானை சமாதானம் செய்ய முன்வந்ததாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், கட்டார் பிரதமரின் அலுவலகத்துடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈரானை சமாதானம் செய்ய தீவிரமாக முயன்றதாக கூறப்படுகின்றது.

வான்ஸை தவிர, வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கட்டார் பிரதமருடன் பேசிய பிறகு, ஈரான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post