யாழை சோகத்தில் ஆழ்த்திய சிறுவனின் உயிரிழப்பு-வெளியான காரணம்..!

 

யாழ்ப்பாணம் அச்சுவேலி, தோப்பு பகுதியில் கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் இன்று மாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிரதீபன் தச்ஷன் எனும் 10 வயதுடைய அரசடி, தோப்பு முகவரியைக் கொண்ட சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.

தனது பேரனுடன் தோட்டத்துக்கு சென்றுள்ளார். பேரன் நீர் இறைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கிணற்றில் கலர் மீன்களை பிடிக்க இவர் முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாளியினை கிணற்றில் விட்ட பொழுது கயிற்றில் கால் சிக்குண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.