பேரூந்து பயணிகளுக்கு சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேருந்து அலகொன்றை தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேருந்து வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. 

அதன்கீழ், மேல் மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பேரூந்துகளை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான நிர்வாகக் கம்பனியை நிறுவி உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post