விபத்தில் சிக்கிய எயார் இந்தியா AI171 விமானத்தில் பயணித்த பயணித்த பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் பதிவிட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த அந்தக் காணொளியில், அவர் இந்தியாவை விட்டு விலகிச் செல்வதைக் குறித்து உருக்கமாகக் கூறுகிறார்.
கடைசி வார்த்தைகள்
"நாங்கள் விமான நிலையத்தில் இருக்கிறோம், விமானத்தில் ஏறவிருக்கிறோம். விடைபெறுகிறேன் இந்தியா! 10 மணி நேரம் பறந்து லண்டனுக்குத் திரும்புகிறேன்."
🚨 Jamie Ray Meek, a British citizen listed as a passenger on Air India Flight 171, reportedly shared a final Instagram Story shortly before takeoff.
— the Pulse (@thePulseGlobal) June 12, 2025
He appears on the official manifest under GBR 149261531. A video believed to be his last post.#India #Crash #Ahmedabad #Boeing… pic.twitter.com/KmSpz9iOi9
இந்த வார்த்தைகளை பகிர்ந்த பின்னர், தனது அருகிலிருந்த ஒருவரிடம் மென்மையான உரையாடலில், "உங்கள் துணையால் நான் பொறுமையை இழக்காமல் இருக்க முடிந்தது – மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் லண்டன் திரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி பதிவுசெய்யப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகே, AI171 விமானம் புறப்பட்டு, வெகு தூரம் செல்லாமல் விபத்துக்குள்ளானது.விமானத்தில் இருந்த 53 பிரிட்டிஷ் பிரஜைகளில் ஜேமி ரே மீக்கும் ஒருவராக இருந்தார்.