கொழும்பில் நேர்ந்த விபத்து-குடும்பஸ்தர் பலி..!

 கொழும்பில் மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று  காலை இடம்பெற்றுள்ளது.

பஸ்ஸில் மோதிய மோட்டார் சைக்கிள் ; ஒருவர் பலி | Motorcycle Hits Bus One Person Dead In Accident

செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் குடைசாய்ந்து பஸ்ஸுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.