இலங்கையில் மற்றுமொரு தாய் கழுத்தறுக்கப்பட்டு கொலை..?

 

கொஸ்கம, புஸ்ஸெல்லாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.

அவிசாவளை - புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைசெய்யப்பட்ட தாய் இறப்பர் பால் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

காலையில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோத அவரைத் துரத்திச் சென்ற ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post