யாழில் அழகியும் இளைஞனும் செய்த கூத்து-ரகசிய தகவலில் சத்தமில்லாமல் தூக்கிய பொலிசார்..!

 யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் 440 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவரும், பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.