இலங்கை குடிமகன்களால் மதுவரித்திணைக்களம் வரலாற்று சாதனை..!

 

இந்த ஆண்டின் கடந்த 6 மாதங்களில் இலங்கை மதுவரித் திணைக்களம் ரூ120.5 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது.

இது நிதி அமைச்சு நிர்ணயித்த இலக்கை விட 102.6% முன்னேற்றமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேபோல், இலங்கை மதுவரித் திணைக்களம் 2023 ஆம் ஆண்டில் 178.6 பில்லியன் ரூபாவை வருவாயாக ஈட்டியுள்ளது.

அத்தோடு 2022 ஆம் ஆண்டு 170.3 பில்லியன் ரூபாவை வருவாயாக ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.