Type Here to Get Search Results !

இந்தியாவில் சிக்கிய இலங்கை தமிழ் இளைஞன் : விசா கிடைக்காததால் எடுத்த விபரீத முயற்சி!!

 

இந்தியாவின், தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டில் தவித்த தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர் ஒருவரை இந்திய கடலோர பொலிஸார் நேற்று (10.07) மீட்டு மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.


தனுஷ்கோடி கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் நடுக்கடலில் மூன்றாம் மணல் திட்டில் இலங்கை தமிழர் ஒருவர் நிற்பதாக இந்திய கடலோர காவல் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.


இதையடுத்து இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் தனுஷ்கோடி அடுத்த மூன்றாம் மணல் திட்டிற்கு சென்ற இந்திய கடலோர காவல் படையினர்

அங்கு மீனவர்கள் கொடுத்த தகவலுக்கு அமைய நின்று கொண்டிருந்த இலங்கை தமிழரை பத்திரமாக மீட்டு தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்து இலங்கை தமிழரை ராமேஸ்வரம் மரைன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.



ஒப்படைக்கப்பட்ட இலங்கை தமிழரை மண்டபம் மரைன் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். 


விசாரணையில் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கியோசன் (28) என தெரியவந்தது.


கடந்த 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற கியோசனின் பெற்றோர். வேலூர் அணைக்கட்டு முகாமில் தங்கியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு கியோசன் தமிழகத்தில் பிறந்துள்ளார்.


பின்னர் 2012 ஆம் ஆண்டு கியோசன் அக்காவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்று மீண்டும் தமிழகம் வந்து தங்கி இருந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மட்டக்களப்பில் தனது அப்பாவுக்கு சொந்தமான நிலங்களை விற்பனை செய்வதற்காக விமானம் மூலம் இலங்கை சென்றுள்ளார்.


நிலங்களை விற்று விட்டு மீண்டும் விமானம் மூலம் தமிழகத்திற்கு திரும்பி வர விசா கிடைக்காததால் கியோசன் சட்டவிரோதமாக படகு மூலம் தமிழகம் வருவதற்காக புதன்கிழமை (9) இரவு மன்னார் கடற்கரையில் இருந்து ரூ.50 ஆயிரம் கொடுத்து படகொன்றில் புறப்பட்டு நள்ளிரவு

இலங்கை உணவு டெலிவரி

தனுஷ்கோடி மூன்றாம் மணல் திட்டில் வந்து இறங்கி உள்ளமை தெரிய வந்துள்ளது 


மத்திய, மாநில உளவுத்துறையினர் கியோசனை விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad