பூசணிக்காய் தோட்டத்திற்கு சென்றவர்-சம்பவ இடத்திலே துடிதுடித்து பலி-வெளியான அதிர்ச்சி காரணம்..!

 

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப் பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் கடந்த புதன்கிழமை (ஜூலை 16, 2025) இரவு நிகழ்ந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் பாதிக்கப் பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கலஹிடியாகொட கிராமத்தைச் சேர்ந்த கெலும் நமல் என அடையாளம் காணப் பட்டுள்ளார். 

சம்பவத்தை அடுத்து, உஹன பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து, பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் இணைத்த ஒருவரை கைது செய்தனர்.


இச் சம்பவம் தொடர்பில் உஹன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post