சற்று முன் நாட்டு மக்களுக்கு பொலிசார் விடுத்த எச்சரிக்கை தகவல்-அவதானம் மக்களே..!

 

தனிப்பட்ட வட்ஸ்அப் கணக்குகளை திருடும் (ஹேக்) நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருடப்பட்ட வட்ஸ்அப் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் https://telligp.police.lk மூலம் பொலிஸ் சைபர் கிரைம் பிரிவில் முறையிட முடியும் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்