Type Here to Get Search Results !

நைஜீரியாவில் இருந்து யாழ் வந்த இளைஞனுக்கு அந்த வருத்தமாம்..!

யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவருக்கு மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 30ஆம் திகதி காய்ச்சலுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பிளாஸ்மோடியம் பல்சிபரம் என்ற மலேரியாக் காய்ச்சல் இனங்காணப்பட்டுள்ளது.

தெல்லிப்பழையைச் சேர்ந்த குறித்த இளைஞன் 6 மாதங்களாக நைஜீரியா கப்பல் ஒன்றில் வேலை செய்துவிட்டு கடந்த 28ஆம் திகதி நைஜீரியாவிலிருந்து விமானம் மூலம் இலங்கையை வந்தடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad