மட்டு நகரை சோகத்தில் ஆழ்த்திய இளம் தாயின் உயிரிழப்பு-தவித்து நிற்கும் குழந்தைகள்..?

மட்டக்களப்பு மகிழவெட்டுவானில்  காட்டு யானையின்  தாக்குதலில் பலியான மூன்று பிள்ளைகளின் தாய்.  காயங்களுடன் உயிர் தப்பிய 3 வயது பெண் குழந்தை.

மட்டு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதிக்குள் நேற்றிரவு 7 மணியளவில் ஊடுருவிய காட்டுயானை ஒன்றினது தாக்குதலில் சிக்கி 38 வயது இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது 38) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது  நேற்று இரவு 7.00 மணியளவில், குறித்த பகுதிக்குள் ஊடுருவிய காட்டு யானை பல வீடுகளையும் தாக்கி சேதப்படுத்தியதுன் மகிழவெட்டுவான் கிராமத்தின் நடு பகுதியான கல்குடா பகுதிக்குள் ஊடுருவிய போது அங்குள்ள  வீடொன்றின் முற்றத்தில் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன்  இருந்த தாயும் அவரது குழந்தையும் யானையைக் கண்டு  வீட்டிற்குள் புகுந்த நிலையில் அவர்களை துரத்திச் சென்ற யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

 தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய நிலையில் குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் அப் பகுதியில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post